எடப்பாடி பழனிசாமி பதவிக்கே வேட்டா..? ஒபீஸ்-ன் மாஸ்டர் பிளான்..!!
எதிர்க்கட்சி துணைதலைவர் இருக்கை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்து ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொடர் சிக்கல்கள் கொடுத்து வருகின்றனர்.. எடப்பாடி பழனிசாமிய பதவியில் இருந்தே தூக்க வேண்டுமென ஓபிஎஸ் டீம் வழக்கு தொடர்ந்துள்ளனர்..
இன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ சுப்புரத்தினம், எடப்பாடியை பதவியல் இருந்தே நீக்க வேண்டும் இதுவரை அவர் வாங்கியுள்ள பணத்தை மீண்டும் திரும்ப கொடுக்க வேண்டுமென வாரண்டோ-வழக்கு-தாக்கல் செய்துள்ளார்..
கடந்த 2௦21ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மீது வேட்புமனு, சொத்துகுவிப்பு போன்ற விவகாரங்களை மறைத்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறி அதிமுக எம்.எல்.ஏ சுப்புரத்தினம் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்..
அந்த மனுவில் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு சொத்துகளையும் கல்வி தகுதியையும் மறைத்து தவறான நடவடிக்கை மட்டுமின்றி ஊழல் நடவடிக்கை மற்றும் சொத்து பற்றிய விவரங்களை தரவில்லை இது பற்றி எடப்பாடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..
எதிர்கட்சி தலைவராக இருக்கும் தகுதி அவருக்கு கிடையாது “எம்.எல்.ஏ” பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டுமென மனுவில் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.. இந்த வழக்கு எப்பொழுது விசாரணைக்கு வருமென எதிர்பார்க்க படுகிறது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..