மக்களை அச்சத்தில் வைப்பதே எடப்பாடியின் வேலை..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்..!!
ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா வழக்கமாக வருவது தான் எனவே இதனைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை; தமிழ்நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருப்பதே எடப்பாடி பழனிச்சாமி-யின் வேலையாக மாறிவிட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் ரூபாய் 6.60 கோடி மதிப்பிலான MRI ஸ்கேன் கருவி மக்கள் பயன்பாட்டிற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்…
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, 6 கோடி 60 லட்சம் செலவில் எம்ஆர்ஐ கருவி மக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது…
இங்கு 11 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த எம் ஆர் ஐ கருவியை விட இது கூடுதல் சிறப்பாக உள்ளது…இந்த புதிய கருவி குறைந்த நேரத்தில் அதிக நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்ய முடியும்…
மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களிலும் எம் ஆர் ஐ ஸ்கேன் கருவி விரைவில் துவக்கிவைக்கப்படும்…
ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் இதுவரை 127 புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் உட்பட 365 நபர்களுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது,.. இதே ரோபோடிக் அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனையில் 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை அறுவை சிகிச்சைக்கானா செலவாகும்…
அறுவை சிகிச்சைக்கு உதவுகின்ற கருவிகள், எலும்பியல் மருத்துவத்திற்கு தேவையான மருத்துவ கருவிகள் என பல்வேறு அதிநவீன வசதிகளை இந்த மருத்துவமனையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தினால், இந்த மருத்துவமணையில் நோயாளிகளிளுக்கான நம்பிக்கை என்பது மிகப் பெரிய அளவில் உயர்ந்து வருகிறது…
தமிழ்நாடு முழுவதிலும் எம் ஆர் ஐ ஸ்கேன் பொருத்தவரை 30க்கும் மேற்பட்டது உள்ளது.. குறிப்பாக *இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லாத பல அதிநவீன கருவிகள் இங்கு உள்ளது…
இயந்திர கருவிகள் வாங்கும்போதே அந்த நிறுவனத்தின் மூலம் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது…
பல் மருத்துவர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங் நடைபெற உள்ளது, வெளிப்படைத்தன்மையோடு இந்த கவுன்சிலிங் நடத்தப்படும்,.. ஏற்கனவே வெளிப்படை தன்மையோடு கவுன்சில் நடத்தப்பட்டது இதில் 34,000 மேற்பட்டவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது…
ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா பற்றி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட எடப்பாடி பழனிச்சாமி குறித்த கேள்விக்கு,”ரிக்கட்ஸியா என்ற பாக்டீரியா” கிராமங்களில், அடர்ந்த மரங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் இந்த காய்ச்சல் என்பது வருவது தான், குறிப்பாக திண்டுக்கல்லில் அதிகமாக பரவியிருக்கிறது என்று கூறியிருந்தனர் அதிலும் எட்டு பேருக்கு பாதிக்கப்பட்டு நான்கு பேருக்கு குணமடைந்துவிட்டது.. இது வழக்கமாக வருவது தான் எனவே இதனைக் கண்டு அச்சமடையத் தேவையில்லை… தமிழ்நாட்டு மக்களை அச்சத்தில் வைத்திருப்பதே எடப்பாடி பழனிச்சாமி-யின் வேலையாக மாறிவிட்டது எனக் கூறினார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..