அதிமுக கட்சி தற்போது தலைமை பொறுப்பிற்காக இரு அணிகளாக செயற்பட்டு வருகிறது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் என இரு தலைவர்களின் மோதலால் பிரிந்து செயற்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக வின் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் தன்னை திமுகவில் இணைத்து கொண்டுள்ளார்.
ஓபிஎஸ் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்து இபிஎஸ் அணியை கடுமையாக எதிர்த்து வந்தார். இந்நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் திடீரெனெ அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் தன்னை திமுக வில் இணைத்துக்கொள்ள தீவிரம் காட்டி வந்த இவர் அண்ணா அறிவாலயத்தில் இன்று கோவை செல்வராஜ் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கே.என்.நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
திமுகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,கடந்த நான்கறை ஆண்டு ஆட்சிக்காலம் சுனாமி வந்து நாட்டில் அழிவை ஏற்படுத்தியது போல் ஆகிவிட்டது. இந்த சீரழிவை திமுக ஆட்சியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சீர் செய்யபட்டு வருகிறது.இது ஏழை எளியமக்களின் மக்களாட்சியாக முதல்வர் தலைமையில் செயல்பட்டு வருகிறது. நான்கரை ஆண்டுகள் அவர்களுக்காக வக்காலத்து வாங்கியதற்கு மக்களிடம் பாவ மன்னனிப்பு கேட்டு கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்
மேலும் அவர் கூறுகையில், அதிமுக இப்போது கட்சியாக இல்லை கம்பெனியாக மாறிவிட்டது என்றும் கொல்லைப்புறமாக ஆட்சியை பிடித்த எடப்பாடி பழனிசாமிக்கு திமுகவை பற்றி பேச தகுதி இல்லை மேலும் என்றும் திமுக ஆட்சியில் பெண்களுக்காக இலவச பேருந்து திட்டம் மற்றும் மாணவிகளுக்கான மாதம் ரூ.1000 போன்ற திட்டங்களால் முதல்வர் ஸ்டாலினுக்கு பெண்களின் ஆதரவு உள்ளது. உண்மையான அதிமுக தொண்டர்கள் திராவிட பரம்பர்யத்தி எப்போதும் தமிழ்நாட்டில் நிலைத்து நிற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் தலைமயிலான திமுக ஆட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் மேலும் 5000 அதிமுக தொண்டர்கள் விரைவில் திமுகவில் இணைவார்கள் என்று அவர் அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.