பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் ஆசிரியர்களின் கல்விச்சான்றிதழ் ரத்து செய்யப்படும்..!! அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை..!!
பார்வைத்திறன் குறைபாடு உள்ள தேர்வர்கள் கணினி வழியில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்….
தொடர்ந்து வகுப்பு வாரியாக பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுப் பேசினார். அப்போது பேசிய அவர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் பூவிருந்தவல்லி பார்வைத் திறன் குறைபாடு கொண்டோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஒருவர் வரும் மார்ச் மாதத்தில் நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு பொது தேர்வினை கணினி வழியில் எழுத விருப்பம் தெரிவித்திருந்தார்,
அவரின் விருப்பத்தை ஏற்று வாசிப்பாளர் உதவியுடன் கணினி வழியில் அவர் தேர்ழுது அனுமதி வழங்கியுள்ளோம். இவர் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தில் பொது தேர்வினை கணினி வழியில் எழுதும் முதல் மாணவராக விளங்குவார்.
வருங்காலங்களில் பார்வைத்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் தாமாகவே தேர்வினை எழுத இந்த நிகழ்வு முன் மாதிரியாக விளங்கும் என்று கூறிய அவர் பார்வைத்திறன் குறைபாடு உள்ள தேர்வர்கள் கணினி வழியில் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்..
தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும். பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். பாலியல் புகார்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வகையில் கருத்துக்களை பரப்பி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள் அதற்கு இடம் கொடுக்காத வகையில் செயல்பட வேண்டும்.
துன்புறுத்தல்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாவட்ட அளவிலேயே பள்ளிகளில் வரும் போக்சோ புகார்களை முன்னுரிமை கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி அளவில் பிரச்சினைகள் வரும் போதே அதனை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும்.
போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்படு வேறு எங்கும் பணியாற்ற முடியாது.
ஆசிரியர் திட்டினாள் கூட 14417 உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மாவட்ட கல்வி அலுவலர்கள் , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தனியார் பள்ளி இயக்குனராக அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது,
போக்சோ தொடர்பாகவும் மாணவர்கள் பிரச்சனை குறித்தும் கூட்டத்தில் பேசி உள்ளோம். போக்சோ சம்பந்தமாக மாணவர் மனசு பெட்டி 14417 என் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு யாருக்கும் அச்சம் இல்லாமல் தொடர்ந்து, எங்கெல்லாம் தவறு நடக்கின்றதோ புகார்கள் பெறப்படுகிறது.
போக்சோ புகார்கள் தொடர்பாக முதலமைச்சர் ஒரு வரைவு அறிக்கை தயாரிக்க சொல்லி இருக்கின்றார். மூன்று-நான்கு நாட்களில் வரைவு வெளியிடப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்படும்.
இனி புகார்கள் வராத வண்ணம் எப்படி விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும் என பேசியுள்ளோம். ஜூன் கல்வி ஆண்டு வரும்பொழுது NGOக்கள் மூலமாகவும், காவல்துறை மூலமாகவும், சமூக நலத்துறை மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பெரிய விழிப்புணர்வு பணியாக மேற்கொள்ளவுள்ளோம்.
இதுவரைக்கும் நிலுவையில் 238 வழக்குகள் உள்ளது, 11 பேர் குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். ஏழு பேர் இறந்திருக்கின்றார்கள். மார்ச் 10ம் தேதி 56 பேருக்கு தீர்ப்பு வர இருக்கின்றது.
எந்தெந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் பயப்பட தேவையில்லை. உங்களுக்கான பாதுகாப்பான உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை என தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..