AngryAngry CryCry LOLLOL LoveLove OMGOMG WTFWTF

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு முட்டை கொள்முதல் விலை கடும் சரிவு!

கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் எதிரொலியால் முட்டை கொள்முதல் விலை 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் ஆகியவை வேகமாக பரவி வருகிறது. கோழிக்கறியால் தான் கொரோனா வைரஸ் பரவி வருவதாக வதந்தி பரவியது. இதனால் தமிழகம் முழுவதும் கோழிக்கறி விலை கடுமையாக சரிந்தது. கோழிக்கறியை தொடர்ந்து முட்டையையும் மக்கள் வாங்காததால் அதன் விலையும் குறைந்துள்ளது.

நாமக்கல் மண்டலத்தில் 1,100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் நாளொன்றுக்கு சுமார் 3.5 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இந்த கொரோனா வைரஸ் பீதியால் முட்டை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 கோடி முட்டைகள் தேக்கமடைந்துள்ளன. இதனால் முட்டையின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையாக சரிந்துள்ளது

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 ரூபாய் 23 காசுகளாக இருந்த முட்டை கொள்முதல் விலை, இன்று 2 ரூபாய் 65 காசுகளாக சரிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

What do you think?

-2 points
Upvote Downvote

‘திமுகவின் புதிய பொதுச்செயலாளர் யார்?’ 29ம் தேதி பொதுக்குழு கூட்டம்!

‘தோண்டப்படும் குழிகள், பலி எண்ணிக்கையை மறைக்கிறதா அரசு?’ வைரலாகும் சாட்டிலைட் புகைப்படங்கள்!