எகிப்து பிரமிடு ரகசியம்..!! தெரிவோம் அறிவோம்-20
உலக அதிசங்களில் எகிப்து கிசா பிரமிடு முக்கியமான ஒன்று பொதுவாக பிரமிடுகளில் மறைந்த மன்னர்களின் உடல்கள், பொருட்கள் புதைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்காக மட்டுமே பிரமிடுகள் பயன்படுத்தப் படுவதாகவும், கூறப்படுகிறது.
இந்த பிரமிடை கட்டி முடிக்க 27 ஆண்டுகள் ஆகியுள்ளது, இந்த பிரமிடை கட்டுவதற்கு 50 லட்சம் டன் கற்கள் தேவைப்பட்டு இருந்ததால், அஸ்வான் மலையில் இருந்து அதாவது பிரமிடில் இருந்து 800 கிமி தொலைவில் உள்ள அஸ்வான் மலையில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த கற்கள் அனைத்தையும் வெட்டி நைல் நதியின் படகு மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பிரமிடின் உயரம் 481 அடி, இந்த பிரமிடின் சிறப்பு அம்சம் இந்த பிரமிடின் முழு வடிவைமைப்பும் மனிதனால் கட்டப்பட்டது, உலகின் மிக பெரிய கட்டடம் என்ற பெருமையும் இதற்கு உண்டு.
இந்த பிரமிடில் இறந்தவர்கள் புதைக்கும் பொழுது உடல் முழுவதும் துணியால்.. சுற்றி புதைக்கப் பட்டு, சில நாட்கள் கழித்து.., புதைந்த இடத்தில் இருந்து அந்த இறந்த உடல் களை நிற்க வைத்து விடுவதாகவும் சிலர் கூறுகின்றனர்.
மேலும் இதுபோன்ற பல அறிவியல் தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..