“ஈத் முபாரக்..” இதயங்களிலும் இல்லங்களிலும் அமைதி..!! தலைவர்கள் வாழ்த்து..!!
மிலாது நபியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மிலாது நபியை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் மிலாது நபி வாழ்த்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வாழ்த்து :
அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈத் முபாரக்! மிலாது-உன்-நபியை முன்னிட்டு வாழ்த்துகள். நல்லிணக்கமும் ஒற்றுமையும் எப்போதும் நிலவட்டும். சுற்றிலும் மகிழ்ச்சியும் செழுமையும் இருக்கட்டும். என பதிவிட்டுள்ளார்..
திரௌபதி முர்மு வாழ்த்து :
சமத்துவ அடிப்படையிலான மனித சமுதாயத்திற்கு முஹம்மது நபி அவர்கள் முன்னுதாரணமாக திகழ்ந்தார் என ஜனாதிபதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார். நாட்டு மக்கள், குறிப்பாக முஸ்லிம் சகோதர சகோதரிகள். சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மனித சமுதாயத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் அற்புதமான முன்மாதிரியை அமைத்துள்ளார்கள்.
சத்தியத்தின் பாதையை பொறுமையுடன் பின்பற்றவும் கற்றுக் கொடுத்துள்ளார். அவரது போதனைகளை நடைமுறை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கும், நாட்டின் அபிவிருத்திக்காக தொடர்ந்து செயற்படுவதற்கும் நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
ராகுல்காந்தி வாழ்த்து :
அதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், இந்த அருமையான நாள் எனவும் நம் இதயங்களிலும் இல்லங்களிலும் அமைதி, மகிழ்ச்சி், இரக்கத்தை கொண்டு வரட்டும் எனவும் அனைவருக்கும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் இருக்க வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..