1200 ரூபாயாக உயரும் முதியோர் உதவிதொகை..! நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை..!!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் சமூக நல பாதுகாப்பு திட்டம் மூலமாக சுமார் 30 லட்சம் பேர் பயனடைகின்றனர். ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மக்களுக்கு கூட விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படும். சமூக நல திட்டங்களுக்காக 845 கோடி கூடுதலாக செலவாகும்.
முதியோர் மற்றும் ஆதரவற்றவர்களுக்கான உதவித்தொகை 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கைம் பெண்களுக்கான உதவித்தொகை 1000 ரூபாயில் இருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கான உதவிதொகை 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்டுள்ள அனைத்து உதவி தொகைகளும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
அதற்காக மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான முகாம்கள் 3 கட்டமாக நடத்தப்பட உள்ளது எனவும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.