வெளியான மார்க்சிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை..!! அட இது சூப்பரா இருக்கே..!!
மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கே.பாலகிருஷ்ணன்.
கச்சத்தீவு விவகாரத்தை பாஜக பேசுவது முழுக்க முழுக்க பச்சையான அரசியல் வியாபாரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தமிழ் மாநில குழு சார்பாக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். வட மாநிலங்களில் கூட பாஜக படுதோல்வி அடையும் என்றும் வேட்பாளர்களை திரும்ப பெறும் நிலையில் பாஜக உள்ளது என பேசினார்.
அதனை தொடர்ந்து தேர்தல் அறிக்கையில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து தெரிவித்த அவர், கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள ஜனநாயக விரோத மசோதாக்கள் ரத்து செய்ய குரல் கொடுப்போம்.
கடந்த 10 ஆண்டுகால அம்பானி, அதானி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள், தாரைவார்க்கப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மீட்டெடுக்கப்படும். பெண்களுக்கு 33% சதவீதம் மசோதா அடுத்து வரும் தேர்தலிலே செயல்படுத்தும் வகையில் நிறைவேற்றப்படும்.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் போன்று நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்படும். அகில இந்திய அளவிலான போட்டி தேர்வுகளை தாய் மொழியில் எழுத நடவடிக்கை.
உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்கப்படும், தமிழ் வழக்காடு மொழியாக கொண்டு வரப்படும். UAPA, NSA, AFSPA சட்டங்கள் ரத்து செய்யப்படும்.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைக்கு ஒத்திசைவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.
பாஜகவிற்கு மாற்றான ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த பின் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கேரளா ஸ்டோரி திரைப்படம் சர்ச்சைக்குரிய திரைப்படம் திரைப்படம் திரையரங்குகளில் பார்ப்பது வேறு. டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது அது அரசாங்கத்தின் குரலாக மாறிவிடுகிறது.
மத மாற்றத்தை எதிர்க்கும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை அரசு வெளியிட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.
கச்சத்தீவு மீனவர்களுக்காக பேசப்படுகிறதா என்றால் கடந்த 10 வருடத்தில் மீனவர் பிரச்சனைக்கு எடுத்த நடவடிக்கை என்ன என கேள்வியெழுப்பிய அவர், கடற் கொள்ளையர்களிடமிருந்து தனியார் கப்பல்களை கப்பல்படை பாதுக்காக்கும் பலம் மிகுந்த ராணுவத்தினால் தமிழ்நாட்டு மீனவர்களை மட்டும் ஏன் காப்பாற்ற முடியவில்லை.
கச்சத்தீவு விவகாரத்தை பாஜக பேசுவது முழுக்க முழுக்க பச்சையான அரசியல் வியாபாரம் என பாஜகவை விமர்சனம் செய்து பேசியுள்ளார்.