விரட்டிய இருவரை மிதித்து கொன்ற யானை – கிருஷ்ணகிரியில் சோகம்

வேப்பனப்பள்ளி அருகே கர்நாடக எல்லையில் யானை தாக்கி வன ஊழியர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழக கர்நாடக எல்லையில் வனப்பகுதியை ஒட்டியுள்ளது பூதிகுட்டா கிராமம். இங்கு முகாமிட்டுள்ள 35 யானைகளை விரட்டும் பணியில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது யானை ஒன்று வன ஊழியர்களை துரத்தியது.

இதில், எதிர்பாராதவிதமாக கர்நாடகாவைச் சேர்ந்த வன ஊழியர் முனியப்பா, யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனிடையே யானை கூட்டம் அங்கிருந்து சென்றபோது, எதிரே வந்த விவசாயி ஒருவரையும் தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

What do you think?

‘புல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு அடைக்கலம்’ தந்தை மற்றும் மகள் கைது!

‘என் சமூகவலைத்தள கணக்குகளை பெண்களுக்கு வழங்க தயார்’ பிரதமர் அதிரடி!