எமெர்ஜென்சி முதல் கைது திருச்சி வேலுச்சாமி..! கறுப்பு வரலாறு..!
இந்திரா காந்தியால் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள “நெருக்கடி நிலை ( Emergency ) ” தற்போது 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அந்த அவசரக்காலத்தில் என்னென்ன கொடுமைகள் நடந்தது என்பது குறித்து அவர் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார்.
இந்திய நாட்டில் “எமெர்ஜென்சி” அறிவிக்கப்பட்டுச் சரியாக 49 ஆண்டுகள் முடிந்து 50ம் ஆண்டை எட்டியுள்ளது. நெருக்கடி நிலை நடைமுறையிலிருந்த தற்போது நாட்டின் பல்வேறு தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதாவது 1975ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி அன்று, அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி, மாநில உரிமைகளை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 21 மாதங்களில் அவசரக்கால நிலையை நடைமுறைப்படுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 352வது பிரிவில் குறிப்பிட்டு இருப்பதாவது, போர் காலங்களிலோ அல்லது அந்நிய நாட்டுப்படை இந்தியாவை ஆக்கிரமிக்க முயற்சி செய்யும்போதோ, அதுபோன்ற சூழல் இல்லை உள்நாட்டுக்குள் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி முயற்சி செய்தாலோ, நாட்டின் இறையாண்மைக்கும் தீங்கு ஏற்பட்டாலோ, அவசர நிலையைப் பிரகடனம் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு.
அப்படி எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாத போது இந்திரா காந்தி தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எமெர்ஜென்சியை என்ற ஒன்றை கொண்டு வந்தார். எனவே தான், அந்த நெருக்கடி நிலையை இந்திய ஜனநாயகத்தின் கறுப்பு வரலாறு என சொல்லப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் பத்திரிகைகள் சுதந்திரமாகச் செய்திகளை வெளியிடுவது தடை செய்யப்பட்டிருந்தது. தணிகைக்கு பிறகே செய்திகளை வெளியிட முடியும் என்ற ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டிருந்தது. “துக்ளக்” என்ற ஒரு பத்திரிகையில் முதல் பக்க அட்டையில் எந்தத் தலைப்பையும் போடாமல் கறுப்பு அட்டையை வெளியிட்டது.
அதாவது முரசொலியின் கிண்டலாக சில தலைப்புகளை வைத்து ஆசிரியர் மு. கருணாநிதி அதனை வெளியிட்டார். இன்று தமிழ்நாட்டின் முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் எமெர்ஜென்சியில் கைது செய்யப்பட்டவர். என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மட்டுமின்றி அவரது கட்சியினர் சிட்டிபாபு உட்பட பலரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி வேலுச்சாமி தனது நினைவுகள் பற்றி பேசும் போது, “காமராஜர் இறந்து 10 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் மிகப்பெரிய கொள்ளைக்காரனைப் பிடிப்பதைப் போல திருச்சியில் இருந்து 10 போலீஸ் வேன்களில் வந்து காவல்துறையினர் என்னைக் கைது செய்தனர்.
தமிழ்நாட்டில் “எமெர்ஜென்சி” வந்ததும் முதன் முதலாகக் கைது செய்யப்பட்டவன் நான் தான். எமெர்ஜென்சி தமிழ்நாட்டிற்கு போதாத காலம். இந்திரா காந்திக்கு ஒரு நிர்ப்பந்தம் இருந்தது. அதனால் அதைக் கொண்டு வந்தார். அதற்குப் பின் பகிரங்கமாக இந்திரா காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டார்” ஆனால் அதை பலரும் இன்று வரை உணராமல் செயல்பட்டு வருகின்றனர்.
வெ.லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..