என்கவுன்டர் கிங் ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை பணியிடை நீக்கம்..! காரணம் இதுவா..? சிபிசிஐடி சொல்லுவது..?
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டான ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு சென்னை அயோத்திக்குப்பம் பகுதியில் பிரபல ரவுடியாக சுற்றி திரிந்த வீரமணியை என்கவுண்டர் செய்தார். அதன் பின் மருதுபாண்டியர் குருபூஜையின் போது 2013-ம் ஆண்டு எஸ்.ஐ. ஆல்வின் சுதனை அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில். அதற்கு காரணமானவர்களை கண்டறிந்து இருவரையும் வெள்ளதுரை என்கவுன்டர் செய்தார்.
மேலும் புதுக்குளம் பாரதி, பிரபு ஆகிய பிரபல ரவுடிகளையும் வெள்ளதுரை என்கவுன்டர் செய்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளதுரை மீதான பல என்கவுன்டர் வழக்குகள் சிபிசிஐடியிடம் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் ஏ.டி.எஸ்.பி. வெள்ளதுரை இன்று பணி ஒய்வுபெற இருந்த நிலையில் தமிழ்நாடு அரசு சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில் திருவண்ணாமலை குற்ற ஆவண காப்பக ஏ.டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த வெள்ளத்துரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதற்கு காரணம் குறித்து விவரித்த போது, சிபிசிஐடி பிரிவின் கீழ் வெள்ளதுரை மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் மீது உள்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவதால். தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..