ஆளுநர்கள் தடுக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி…!! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு..!!
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமலும், திருப்பி அனுப்பாமலும், திசை திருப்பும் வகையிலும், அரசமைப்புச் சட்ட விரோத நடவடிக்கைகள் பலவற்றிற்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்த பதவிப் பிரமாண உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாகவும், முரணாகவும் நடந்துகொள்வது பற்றியும், அவரது அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும், அவர் தனக்கு இல்லாத அதிகாரங்களைப் பயன்படுத்துவது முறைகேடு, அரசமைப்புச் சட்ட விரோதம், இதற்கு உச்சநீதிமன்றம் நீதி வழங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது.
இதனை விசாரணை செய்த உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் ஜஸ்டிஸ் பர்திவாலா, ஜஸ்டிஸ் மகாதேவன் ஆகியோரைக் கொண்ட அமர்வு வழங்கியுள்ள தீர்ப்பின்படி, ஆளுநரின் செயல்பாடு நேர்மையானதாக இல்லை என்றும் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சட்டவிரோதமான செயல் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 3 மாதத்துக்குள்ளும் மசோதாக்கள் மீது ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில சட்டமன்றங்களின் சட்டமன்ற உரிமைகளை மீண்டும் உறுதிப்படுத்தி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் முற்போக்கான சட்டமன்ற சீர்திருத்தங்களை மத்திய அரசு பரிந்துரைக்கும் ஆளுநர்கள் தடுக்கும் போக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் இன்றைய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை நாங்கள் நன்றி தெரிவித்து வரவேற்கிறோம்.
மத்திய-மாநில உறவுகளில் சமநிலையை மீட்டெடுப்பதில் இது மற்றொரு முக்கியமான படியாகும், மேலும் உண்மையான கூட்டாட்சி இந்தியாவை உருவாக்குவதற்கான தமிழ்நாட்டின் தொடர்ச்சியான போராட்டத்தில் ஒரு மைல்கல் வெற்றியாகும். தமிழக மக்களுக்கும் எங்கள் சட்டக் குழுவிற்கும் எனது வாழ்த்துக்கள்..