‘வரலாற்றில் முதல் முறை’ காதலியை கரம்பிடிக்கும் இங்கிலாந்து பிரதமர்!

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது காதலி கேரி சைமண்ட்ஸை மூன்றாவதாக திருமணம் செய்யவுள்ளார்.

அண்மையில் நடந்துமுடிந்த இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது முறையாக அந்நாட்டின் பிரதமராக போரிஸ் ஜான்சன் பொறுப்பேற்றார். 55 வயதான போரிஸ் ஜான்சன் ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானவர். இவரது முதல் 2 மனைவிகளின் மூலம் 6 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் போரிஸ் ஜான்சன் மூன்றாவதாக திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளார்.

boris johnsonக்கான பட முடிவுகள்
போரிஸ் ஜான்சன்

பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன் மேயர் தேர்தலில் தனக்காக பிரசாரம் செய்த கேரி சைமண்ட்ஸ் என்பவரை காதலித்து வந்தார். கேரி தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும் இதனால் போரிஸ் ஜான்சன் அவரை திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் இங்கிலாந்தின் கடந்த 200 ஆண்டு கால வரலாற்றில், பிரதமர் பதவியில் இருக்கும் போதே ஒருவர் திருமணம் செய்து கொள்ளப்போவது முதல் முறை என்று கூறப்படுகிறது. .

What do you think?

மாஃபியாவின் தோல்வியால் சறுக்கிய அருண் விஜய்

‘சன்னிலியோனாக வேண்டும்’ பிக்பாஸ் புகழ் மீரா மிதுன் அதிரடி அறிவிப்பு!