‘கொரோனா வைரஸுக்கு எதிராக உலக யுத்தம்’ இங்கிலாந்து இளவரசர் அறிவிப்பு!

கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே யுத்தம் நடத்தி கொண்டிருப்பதாக இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. அந்தவகையில் இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அந்த நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலால் 104 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2, 626 பேர் பாதிக்கப்பட்டள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கொரோனா வைரஸ் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “துன்பங்கள் எப்போது எந்த சூழ்நிலையில் தாக்கினாலும் இங்கிலாந்து மக்கள் அதனை எதிர்த்து போராட வேண்டும். இந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவ வேண்டும் அதுதான் நம்முடைய சிறந்த மதிப்பையும், மனித இயல்பாயும் காட்டுவதாக இருக்கும் என்றும் கொரோனா வைரஸுக்கு எதிராக உலகமே யுத்தம் நடத்தி கொண்டிருக்கிறது என்றும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான பணியை வேகப்படுத்தி இருப்பதாகவும்” தெரிவித்தார். மேலும் “இந்த கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் தேசிய அவசர அறக்கட்டளை உதவி செய்யும்” என்றும் கூறினார்.

What do you think?

‘தமிழக விளை நிலங்களை கூறுபோடாதீர்கள்’ மத்திய அமைச்சரிடம் வைகோ கோரிக்கை!

தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கை திருப்திகரமாக உள்ளதா?