ப்ளான் பண்ணலனாலும் நாங்க தான் ஜெயிப்போம்..!!
மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக தெரிவித்துள்ளார.
சத்தீஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.
இதனால், பாஜக, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் களத்தில் இறங்கியுள்ளது. இதில் பிரதான போட்டி பாஜகவும், காங்கிரஸும் தான். இந்த 5 மாநில தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல், மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் இரு கட்சிகளும் மும்மரம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், மக்களவை தொகுதி பங்கீடு தொடர்பாக தற்போது எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது அவர், ஐந்து மாநில தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும், சட்டீஸ்கர், ராஜஸ்தான் மாநிலத்தில் நாங்கள் நல்லாட்சி கொடுத்துள்ளதால், எந்த சிக்கலும் இல்லை எனவும் கூறினார்.
பண வீக்கம், வேலை வாய்ப்பு இன்மை ஆகியவை பாஜக மீது அதிருப்தியை உண்டாக்கி உள்ளதாகவும், பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கார்கே, சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டி முடிவு எடுக்கும் என்றும், அதேபோல் மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு குறித்து இன்னும் எந்தவித ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என கூறினார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..