பார்வைகள் இழந்தாலும் திறமை இழக்கவில்லை..!! பாராட்டு மழையில் ராம்குமார்..!!
படிப்பிலும், விளையாட்டிலும் அதிக திறமை கொண்டா “ராம்குமார்”. 10 வயதில் நடந்த ஒரு விபத்தில் பார்வை இழந்துள்ளார், ஒரே மகனின் பார்வை பரிபோகி விட்டதே என்று நினைத்து வருத்தப்பட்ட ராம்குமாரின் பெற்றோர்கள். பிள்ளையின் எதிர்காலத்தை நினைத்து ஆண்கள் மேல்நிலை பள்ளியில், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்டு எங்கள் மகனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டு பள்ளியில் சேர்த்துள்ளனர்.
பத்து, பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்து, கல்லூரியில் பி.காம் சேர்ந்துள்ளார், படிக்கும் போதே வங்கி எக்ஸாம்கள் எழுதியுள்ளார். அதன் மூலம் அவருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் வேலை கிடைத்துள்ளது.
வங்கி வேலை என்றாலும் அதிலும் கணினி பிரிவை கேட்டு பெற்றுள்ளார். இவருக்கு கணினி அறிவை அதிகம் கற்றுக் கொடுத்தவர், ராம்குமாரின் ஆசிரியை ராஜேஸ்வரி. கம்ப்யூட்டர் இயக்கத்தில் தொழில் நுட்பத்தில் அதிக திறம்பட கற்றுக்கொண்டவர்.
வங்கியின் வளர்ச்சிக்காக டிஜிட்டல் டூல் கிட் என்ற ஒரு அப்ளிக்கேஷனை உருவாக்கியிருக்கிறார். இந்த அப்ளிக்கேஷன் உருவாக்கத்திற்கு இவருக்கு உறுதுணையாக பிரேம்குமார் மற்றும் பரத்ராம் என்றோர் உறுதுணையாக இருந்துள்ளனர்.
இந்த ஆப் தலைமையகத்திற்கும் வங்கி கிளை மேலார்களுக்கும் பெரிதும் உதவியாக இருந்துள்ளது. இந்த ஆப்பின் சிறப்பு அம்சம் தவறுகள் நடக்காமல் பண பரிவர்தனை மற்றும் அவரவர் வங்கி தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்வதற்கு, பெரும் உதவியாக இருந்துள்ளது.
இந்த ஆப் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் அனைத்து வங்கிகளிலும் பயன் படுத்த முடியும் என்று ராம்குமார் கூறினார்.
இவரின் இந்த செயலை மதிமுகம் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.., நீங்களும் பாராட்ட நினைத்தால் இந்த மெயில் ஐடிக்கு மெயில் செய்யவும். misterenthu@yahoo.com
மேலும் இதுபோன்ற பல உண்மைக் கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்