டேஸ்டியான கோக்கனெட் கேக்!!!
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய இந்த டேஸ்டியான கோக்கனெட் கேக்கை பிறந்தநாள் பார்ட்டிகளில் செய்து பாராட்டுகளை பெறுங்க.
பிஸ்கெட்- 250 கிராம்
வெண்ணெய்- 100 கிராம்
சீஸ் கிரீம்- 500 கிராம்
க்ரீம்- 250 கிராம்
தேங்காய் பொடி- 100 கிராம்
ஒயிட் சாக்கலேட் – 250 கிராம்
ஜெலட்டின் – 2 ஸ்பூன்
முதலில் ஒரு மிக்சி ஜாரில் பிஸ்கெட்டுகளை போட்டு அருமையாக பொடித்து கொள்ள வேண்டும்.
இந்த பிஸ்கெட் பொடியை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் உருக்கிய வெண்ணெயை சேர்த்துக்கொள்ள வேண்டும். அதனை கேக் மோல்டில் பேஸ்மெண்டாக போட வேண்டும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் சீஸ் கிரீம் மற்றும் கிரீம் போட்டு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும் அத்துடன் ஒயிட் சாக்லேட், தேங்காய் பொடியையும் சேர்த்து நன்றாக கிளறி அத்துடன் நாம் முன்பு செய்து வைத்துள்ள பிஸ்கெட் பேஸ்மெண்டில் சேர்க்க வேண்டும்.
அதற்கு மேலே ஊற்றுவதற்கு ஒரு ஒயிட் சாக்லேட்டில் க்ரீம் சேர்த்து நன்றாக கிளறி அதனையும் டாப்பிங்கிற்காக ஊற்ற வேண்டும்.
தேங்காய் பொடியை தூவி விட வேண்டும். அதன்மேல் விரும்பினால் நட்ஸ் கலவையையோ அல்லது பொடித்த நட்ஸ்களையோ தூவலாம்.
இந்த கலவையை ஒரு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். சுவையான கோக்கனெட் கேக் ரெடி.