அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் ( Everything Everywhere All At Once) என்ற திரைப்படம் 7 ஆஸ்கர் விருதுகளை தட்டித்தூக்கியுள்ளது.
சிறந்த திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்திற்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தில் நடித்த மிஷ்ஷெல் யோ-விற்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது பெற்ற முதல் ஆசியப்பெண் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதை ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தை இயக்கிய இயக்குநர்களான டேனியல் கிவான் (Daniel Kwan) மற்றும் டேனியல் ஸ்கினெர்ட் (Daniel Scheinert) வென்றனர்.
சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கார் விருதை வென்றது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ (Everything Everywhere All At Once) திரைப்படத்திற்காக பால் ரோஜர்ஸ் வென்றார்.
சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’படம் வென்றது.
சிறந்த துணை நடிகைக்கான விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தின் ஜேமி லீ கர்டிஸூக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான விருது ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ படத்தின் கீ ஹ்யூ குவானுக்கு வழங்கப்பட்டது.