நடப்பதெல்லாம் நன்மைக்கே..!! குட்டி ஸ்டோரி-11
ஒரு மரத்துல இரண்டு குரங்கு வாழ்ந்துட்டு வருது. அதுல ஒரு குரங்குக்கு கடவுள் நம்பிக்கை அதிகம், எப்போதுமே கடவுள் நினைத்து பிராத்தனை பண்ணிட்டே இருக்கும்.
இன்னொரு குரங்குக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் கூட கிடையாது, இந்த குரங்கு எப்போலாம் பிராத்தனை பண்ணுதோ இன்னொரு குரங்கு அப்போயெல்லாம் சிரிச்சி சிரிச்சி கிண்டல் பண்ணிட்டே இருக்குமாம்.
அந்த இரண்டு குரங்கும் மரத்துல விளையாடிட்டு இருக்கும் போது கடவுள் நம்பிக்கை உள்ள குரங்கு கிழ விழுந்துருது தவறி, சின்ன காயங்களோடு தப்பிச்சிருது உடனே கடவுளே நீங்காத சின்ன அடிகளோட காப்பதுணிங்க ரொம்ப நன்றி அப்படினு சொல்லுது.
மேல இருந்த குரங்கு சொல்லுது என்னப்பா கடவுள் தான உன்ன காப்பாத்துனாரு அப்போ ஏன் அந்த கடவுள் உன்னை கீழ விழ வைத்தாறு கேட்டு சொல்ல அப்படினு சிரிச்சிட்டே சொல்லுது..,
இந்த குரங்கும் கடவுள்கிட்ட பிராத்தனை பண்ணுது கண்ணு தொறந்து பாக்கும்போது மேல இருந்த குரங்க ஒரு பெரிய மலைப்பாம்பு வந்து கடிச்சி சாப்பிட்டுருது..
அப்போ தான் இந்த குரங்கு நினைக்குது அதுனாலதா கடவுள் நம்மள கீழ விழவச்சாரு போல.. அப்படினு நினைச்சுகிட்டு எல்லாம் நன்மைக்கே அப்படினு போயிருது .
இதுல இருந்து என்ன புரியுதுன்னா நம்ம வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வந்துச்சுனா கடவுள்மேல பழிபோடம எல்லாம் நன்மைக்கே அப்படினு வாழ்க்கையே நோக்கி போயிட்டே இருக்கனும் . அப்படி இருந்தா லைப் நல்லா இருக்கும்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..