அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலத்தில் முக்கிய புள்ளி ஒருவரை வைத்து தன்னிடம் 2000 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தனபால் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள் சமீபக்காலமாக வந்த வண்ணம் உள நிலையில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் எடப்பாடி தான் அனைத்திற்கும் காரணம் என பேட்டியளித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் செய்தியாளர்களிடம் பேசிய தனபால் தெரிவித்ததாவது:
“கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக எந்த தகவலையும் வெளியே சொல்லக்கூடாது என எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் கரட்டூர் மணி என்பவர் மூலம் ரூ.2000 கோடிக்கு பேரம் பேசினர்.
மேலும், சேலம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவி மற்றும் சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் நிற்க வைத்து, அமைச்சர் பதவி தருவதாகவும் என்னிடம் கூறினர். வரும் 14ம் தேதி சிபிசிஐடி விசாரணையில் ஆஜராவதை தடுப்பதற்காக நான் மனநலம் பாதிக்கப்பட்டவன் என எடப்பாடி பழனிசாமி மற்றும் இளங்கோவன் ஆகியோர் முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.