குட்கா முறைகேடு வழக்கு ஆஜரான மாஜி அமைச்சர்கள்..!! நீதிமன்றம் உத்தரவு..!!
அதிமுகாவின் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன், ஆகியோர் மீதான குட்கா குட்கா முறைகேடு வழக்கில் சென்னையின் காவல் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 25 பேர் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது..
தற்போது தமிழ்நாட்டில் போதைபொருள் புழக்கம் அதிகாமாகி வரும் நிலையில் அதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு போதைபொருளை ஒழித்து வருகிறது.. இப்படி இருக்க தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அதாவது அதிமுக ஆட்சியில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தடையை மீறி குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழப்பட்ட நிலையில் இந்த விசாரணையானது டெல்லி சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..
அந்த விசாரணையில் குடோன் உரிமையாளர் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது..
அதுதொடர்பான விசாரணையில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை முழுமையாக இல்லை என்றும் பிழைகளை சரி செய்து அந்த விசாரணையை அனுமதிப்பதற்கான ஒப்புதல்களை ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என்றும் சிபிஐ அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது..
கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் :
அதன் பின்னர் சிபிஐ அதிகாரிகள் குற்றபத்திரிக்கையில் இருந்த பிழைகளை திருத்தம் செய்து 6 பேருடன் புதிதாக ஒன்றிய, மாநில அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள் பெயர்களை இணைத்து தாக்கல் செய்தது. அதில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜய் பாஸ்கர், அ.சரவணன், டாக்டர் லக்ஷ்மி நாராயணன், பி.முருகன், சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழ்நாடு அரசின் முன்னாள் டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உருபினர்களும் சம்மந்தபட்டு இருப்பதால் இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக இந்த குட்கா முறைகேடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பின் இந்த வழக்கானது கடந்த ஆகஸ்ட் மாதம் 2ம்தேதி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா முன்பு விசாரணை செய்யப்பட்டது. அப்போது குற்றம் சாட்டப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகினர்.
அந்த வழக்கை விசாரணை செய்த பின் முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் பெயர்களை கூடுதல் குற்றபத்திரிக்கையில் தாக்கல் செய்திருந்தது… அதாவது முறைக்கேட்டில் ஈடுபட்ட இன்னும் சிலரின் பெயர் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த குற்றபத்திரிக்கையில் தாக்கல் செய்யபட்டிருந்தவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.. அதில் அவர்கள் அனைவருக்கும் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இந்த வழக்கானது நேற்று நீதிபதி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், குட்கா சப்ளையர் மாதவராவ் உள்ளிட்ட 25 பேர் நேரில் ஆஜராகினர். அப்போது, அவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வக்காலத்து தாக்கல் செய்தனர்.
ஆனால், குற்றம்சாட்டப்பட்ட சிலர் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகிவில்லை. எனவே நீதிபதி, வக்காலத்து தாக்கல் செய்யாதவர்கள் வருகின்ற 23ம் தேதி வக்காலத்து தாக்கல் செய்ய வேண்டும். என்றும் அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அதன் பின்னரே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..