அத்து மீறும் 2கே கிட்ஸ்…! 13 வயது சிறுமிக்கு தந்தையாக போன 20 வயது இளைஞர்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சி பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதிக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் வயது 13 குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
குடியாத்தம் ஆசிரியர் காலனி ராமலிங்க நகர் முதல் தெருவை சேர்ந்த கரிகாலன் என்பவருடைய மகன் வினோத் வயது 20 என்பவர் இந்த மாணவியை காதலிப்பதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த மாணவியின் தந்தை விபத்தில் காயமடைந்ததால் அந்த மாணவியின் தந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உடன் அவரது தாயும் இருந்தால் அந்த சிறுமியை பாட்டி வீட்டில் இருக்க சொல்லிய போது அந்த சிறுமி வீட்டிலேயே இருப்பதாகவும் பாட்டி வீட்டிற்கு செல்லவில்லை என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து தனியாக இருந்த அந்த மாணவி வீட்டுக்கு சென்ற வினோத் ஐந்து தினங்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு இருவரும் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அந்த மாணவியின் பெற்றோருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர் .அதே நேரத்தில் அவர்களது உறவினர்கள் காவல்துறையின் குழந்தைகள் உதவி மையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அந்த மையத்தினர் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அல்லிராணி விசாரணை நடத்தினார் விசாரணையில் அந்த மாணவியிடம் வாலிபர் வினோத் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வினோத் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.