ராணிப்பேட்டையில் பரபரப்பு..! ஆசை காட்டி பணமோசடி..! முக்கிய பிரமுகர் மூலம் கொலை மிரட்டல்..!
ராணிப்பேட்டை அருகே இயங்கி வந்த பிரபல சிட்பண்ட் நிறுவனம் ஒன்று பணமோசடி செய்துவிட்டதாக கூறி அப்பகுதி மக்கள் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ராணிப்பேட்டையை சேர்ந்த சசிகலா, அவரின் அலெக்ஸ் பாண்டியன் மருமகன் சாரதி உள்ளிட்டோர் கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட்டனர்.
தங்க நாணய தொழில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டு விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஒரு கிராமுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியும், 10 ஆயிரம் ரூபாய் திட்டத்தில் முதலீடு செய்தால் 6 மாதம் கழித்து 10 கிராம் தங்க நாணயம் வழங்கப்படும் என நம்ப வைத்து மோசடியில் ஈடுபட்டனர்.
இதே போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் நியூ லைவ் என்ற திட்டத்தில் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.
இது தொடர்பாக ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும், டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, தற்போது மீண்டும் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என ஏமாந்த மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
எனவே ஏமாற்றி சென்றவர்கள் மீது, நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விசிக பிரமுகர் குண்டா சார்லஸ் மூலம் எங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்டவர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..