பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு..! எந்த தேதி வரை தெரியுமா..?
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி, மார்ச் 22ம் தேதி வரை நடைபெற்றது. நடைபெற்று முடிந்த பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் மே 6ம் தேதி வெளியானது. அந்த பொதுத்தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 94.56% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில், மாணவியர்கள் 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 பேரும், மாணவர்கள் 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் (100%) தேர்ச்சி அடைந்துள்ளார். இந்த ஆண்டும், மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதனை தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் கொடுக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப அவகாசம் ஜூன் 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் சோ்க்கைக்கான கலந்தாய்வானது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் மாதம் இணையவழியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 6-இல் தொடங்கி ஜூன் 6-ம் தேதியுடன் நிறைவடைந்தது.
மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 12 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும், 1 லட்சத்து 78 ஆயிரத்து 180 போ் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்தும் உள்ளனா்.
இதனிடையே, விண்ணப்ப அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பெற்றோர்கள், மாணவா்கள் தரப்பில் தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதை ஏற்று பொறியியல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு விண்ணப்பப் பதிவுக்கான கால அவகாசம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் விவரங்களுக்கு 01800-425-0110 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடா்புகொண்டு விளக்கம் பெறலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..