“தேர்தல் பத்திரம் மூலம் பணம் மிரட்டல்..” பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் பதவி விலக தயாரா..? முதலமைச்சர் சித்தராமையா கேள்வி..?
பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தங்களது பதவியை ராஜினாமா செய்தால் தானும் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மைசூர் மாநகராட்சி வளர்ச்சி குழுமம் (மூடா) சார்பில் முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் முறைகேடு நடந்துள்ளதாகவும் அதனால் வளர்ச்சி குழுமத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது..
ஆனால் சித்தராமையா தரப்பில் தன்னுடைய மனைவிக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும். மூடாவின் சட்ட விதிமுறைகள் பின்பற்றி தான் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்..
இந்நிலையில் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய (மூடா) ஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கர்நாடக லோக்ஆயுக்தாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது..
மூடா ஊழல் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என அனுராக் தாக்கூர் வலியுறுத்தினார்..
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாருக்கு பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நில ஒதுக்கீடு புகாரில் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி ஆகியோர் முதலில் பதவி விலக வேண்டும்.. அவர்கள் பதவியில் இருந்து விலகினால் தானும் பதவியை ராஜினாமா செய்ய தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்..
மேலும் மூடா, நில மோசடி தொடர்பாக தன் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..