காதல் தோல்வி.. விரக்தியில் வாலிபரின் விபரீத முடிவு..!
நிலகிரி மாவட்டம் ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்த ஞானசேகரன் என்பரின் மகன் கார்த்திக் (வயது 24). இவர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்தார்.
இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இளம் பெண் கார்த்திகிடம் பேசுவதையும் நிறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கார்த்திக் மனமுடைந்து மது பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் சரி வர வேலைக்கு செல்லாமல் இருந்த இவர் கடந்த 24ம் தேதி இரவு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுமந்து போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்த போலீசார் காதல் தொல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று திவீர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்