‘நடிகர் அஜித்தின் கையெழுத்துடன் FaceBook-ல் வெளியான அறிக்கை’ ரசிகர்கள் ஏமாற்றம்!

நடிகர் அஜித் பெயரில் பேஸ்புக்கில் புதிதாக போலியான கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு அதன் மூலம் மோசடி செய்ய முயற்சி.

நடிகர் அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பொதுவாக அஜித் பொதுநிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் போன்றவற்றில் கலந்துகொள்ளமாட்டார். அதே போல் அவருக்கென்று தனியாக சமூகவலைதலக்கணக்குக்களும் கிடையாது.

இந்நிலையில் அஜித் பெயரில் போலியாக பேஸ்புக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டு அதில் அஜித்தின் கையெழுத்துடன் கூடிய அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “நான் சமூக வலைத்தளங்களிலிருந்து ஒதுங்கி இருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பலமுறை தெரிவித்திருந்தேன். தற்போது மீண்டும் சமூக வலைத்தளத்தில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது. அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது எனது அதிகாரபூர்வ பேஸ்புக் கணக்கு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம். மேலும் இதை காரணமாக வைத்து சமூக வலைத்தளங்களில் எனது ரசிகர்கள் எந்தவிதமான தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் அஜித்குமாரின் கையெழுத்தும் இடம்பெற்றிந்தது. இதனால் அஜித் ரசிகர்கள் ஏராளமானோர் அதில் இணைந்தனர். ஆனால் இந்த பேஸ்புக் கணக்குப் போலி என்றும் இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்க இருப்பதாகவும் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

What do you think?

“பேராசிரியர் இழப்பு வேதனைக்குரியது” – கமல் இரங்கல் டிவிட்

‘மரணத்திலும் ஒற்றுமையை கடைபிடித்த தோழர்கள்’ தொண்டர்களை நெகிழ்ச்சியடையவைக்கும் தகவல்!