கள்ள காதல் மோகம்..!! கண்ணகிநகர் ரவுடியை கால்களில் மாவு கட்டுடன் பிடித்த போலீஸ்..!!
சிறையில் இருந்து வெளியே வந்த கண்ணகி நகரில் ரவுடியாக வளம் வரும் ரவுடி அவரது மனைவி, மனைவியின் கள்ளக்காதலன் உள்ளிட்ட மூவரை கொலை செய்ய திட்டம் தீட்டி அரங்கேற்றுவதற்கு முன்பு மூன்று கொலைகளை தடுத்து நிறுத்திய கண்ணகி நகர் போலீசார் ரவுடி இருவரின் கால்களுக்கு மாவு கட்டு போட்டது எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னை OMR சாலையில் உள்ள கண்ணகி நகர், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, பெரும்பாக்கம் எட்டு அடுக்கு குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் அதிகளவு குற்றச்செயல்கள் நடைபெற்று வந்துள்ளது. கண்ணகி நகர், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, பெரும்பாக்கம் எட்டு அடுக்கு குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் அதிகளவு குற்றசம்பவங்கள் நடைபெறும் இடமாகவும், குற்றவாளிகள் அதிகளவு உள்ள இடமாகவும் மக்களால் பார்க்கப்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக சென்னை கண்ணகி நகரில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். பெரும்பாலானோர் கூலி தொழிலாளிகள். இந்த பகுதியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கஞ்சா, போதை தரக்கூடிய மாத்திரை, சட்டவிரோத மது பாட்டில் விற்பனை என பல்வேறு சட்டவிரோத செயல்கள் அரங்கேறி வந்த நிலையில் கடந்த ஒரு வருடங்களாக நாளுக்கு நாள் குத்ரச்சம்பவங்கள் குறைந்து அப்பகுதி இளைஞர்கள் சிறுவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டி சாதித்து வருகின்றனர்.
இந்நிலையில் கண்ணகி நகரில் கஞ்சா மற்றும் போதை தரக்கூடிய மாத்திரை விற்பனை போட்டியால் கஞ்சா வியாபாரி அருண் (எ) லே (24) என்ற இளைஞர் அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரியான டில்லி பாபுவை சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி செய்து வந்தபோது திருவான்மியூரில் வாகனத்தை மடக்கி பட்டப்பகலில் நபர்களுடன் சேர்ந்து சரமாரி வெட்டி படுகொலை செய்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் அருண் என்கின்ற லே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு கொலையான டில்லி பாபுவின் தாய், சகோதரிகள் இருவர் இணைந்து கொலை செய்த அருண் லே தாயாரை கோவத்தில் தாக்கியுள்ளனர். சிறையில் இருந்த அருணை பார்க்க சென்ற அவரது மனைவி சிவாணி தாய் சுமதியை டில்லி பாபு குடும்பத்தினர் தாக்கியது குறித்து கூறியுள்ளார்.
அதை தொடர்ந்து சிறையில் இருந்து கடந்த 20 நாட்களுக்கு முன்பு அருண் லே நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். வெளியே வந்த அருண் சென்னை பாரிமுனையில் உள்ள நீதிமன்றத்தில் தினமும் மாலை 5:30 மணிக்கு கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் நேற்றைய முன்தினம் இரவு கண்ணகி நகர் பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு சென்ற அருண் லே, அவரது நண்பர் நவீன் உள்ளிட்ட சிலர் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். கடை உரிமையாளர் டீ குடித்ததற்கு பணம் கேட்டபோது கொலை செய்துவிட்டு சிறை சென்று வந்த என்னிடமே பணம் கேட்கிறாயா என்று கூறி மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியது மட்டுமல்லாமல் கத்தி முனையில் பணம் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து டீ கடை உரிமையாளர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தயாளிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கண்ணகி நகர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாள் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் வேல்முருகன், தியாகராஜன், காவலர்கள் மனோகரன், கார்னிஷ் குமார். அஷ்வின் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் அருண் லே உள்ளிட்ட நபர்கள் கண்ணகி நகர் கிருஸ்தவ சுடுகாடு பகுதியில் பதுங்கி இருப்பதாக ஆய்வாளர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. ரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு பதுங்கி இருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்பொழுது போலீசாரை பார்த்து சுமார் 8 அடி உயரம் கொண்ட சுடுகாட்டின் மதில்சுவரை எகிரிகுதித்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்தது ரவுடி அருண் லே மற்றும் நவீன் (வயது 19) ஆகிய இருவருக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பின்னர் இருவரையும் மீட்ட போலீசார் சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொலை செய்ய திட்டம் தீட்டிய இருவரின் கால்களுக்கு மாவு கட்டு போட்டனர். பின்னர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் போலீசார் அருண் லே, நவீன் உள்ளிட்டவர்களை கைது செய்யவில்லை என்றால் அதே பகுதியில் அன்று மூன்று கொலை சம்பவங்கள் அரங்கேறியிருக்கும் என்ற அதிர்ச்சி தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது.. சிறையில் இருந்து வெளியே வந்த அருண் லே சிறையில் இருக்கும் நேரத்தில் அருண் லே மனைவி சிவாணிக்கு சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்த மான்ராஜ் என்பவருடன் பழக்கும் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது.
தகவல் அறிந்த அருண் லே மனைவியிடம் கள்ளக் காதல் குறித்து கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தற்பொழுது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் கணவன் அருண் லே பிறந்தநாளுக்கு புத்தாடை எடுத்து வைத்திருந்த அவரது மனைவி சிவாணி அவரது காதலனுக்கு அந்த புத்தாடையை கொடுத்துள்ளார். இதை அறிந்த அருண் லே கடுமையாக ஆத்திரமடைந்துள்ளார்.
இந்த நிலையில் ரவுடி அருண் லே சிறையில் இருக்கும் நேரத்தில் அவரது மனைவி வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த அருண் லே மனைவி, மனைவியின் கள்ளக் காதலன், அருண் லே வின் தாயை தாக்கிய டில்லி பாபுவின் உறவினரான குப்பன் ஆகிய மூன்று பேரை கொலை செய்ய திட்டம் திட்டியுள்ளார்.
அருண் லே கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் திரைப்படத்தை மிஞ்சும் வகையில் மாஸ்டர் பிளான் போட்டுள்ளார். தினந்தோறும் சென்னை பாரிமுனையில் உள்ள நீதிமன்றத்தில் மாலை 5:30 மணிக்கு கையெழுத்திடும் அருண் லே நேற்றைய முன்தினம் மாலை கையெழுத்திட்ட பின்பு அன்று இரவு மூவரையும் கொலை செய்ய திட்டம் திட்டியுள்ளார்.
கொலை பயன்படுத்தும் கத்தியை அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை வாங்கி வைக்க சொல்லியுள்ளார். அதேபோல் கொலை செய்ய செல்வதற்காக இருசக்கர வாகனத்தையும் ஒருவரை தயார் நிலையில் வைக்க சொல்லியுள்ளார் என்பதும் விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவலை கூறியுள்ளனர்.
இப்படி கொலை செய்ய தேவைப்படும் அனைத்தையும் மற்றவர்களை தயார்படுத்த செய்த நிலையில் அருண் கொலை சம்பவத்தை அரங்கேற்ற போவதற்கு முன்பாக கண்ணகி நகர் காவல் ஆய்வாளர் தயாள் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்ததால் மூன்று கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டன.
மேலும் டில்லு பாபு கொலை வழக்கில் சிறை சென்ற அருண் லே, நவீன் ஆகிய இருவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து 20 நாட்களே ஆன நிலையில் மீண்டும் ஒரே நாளில் மூன்று பேரை கொலை செய்ய திட்டத்தை போலீசார் முறியடித்துள்ளனர்.
பின்னர் அருண் லே, நவீன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சோழிங்கநல்லூர் நீதோம்ன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கண்ணகி நகர் பகுதியில் நடைபெற இருந்த மூன்று கொலைகளை தடுத்து நிறுத்திய காவல் ஆய்வாளர் தயாள் தலைமையிலான தனிப்படையினர்க்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் பாராட்டுகளை தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..