நில பிரச்சனையில் தொடங்கிய கள்ள காதல்..!! சிக்கிய 50 வீடியோ..!! போலீஸ் விசாரணையில் வெளிவந்த பல பகீர் தகவல்கள்..!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த். ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இவர் வசிக்கும் வீட்டின் அருகே வீட்டின் அய்யனார் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சின்னசேலம் பகுதியை சேர்ந்த முத்தையன் என்பவர் அடிக்கடி சென்றுவருவது வழக்கம். இதன்காரணமாக ஆனந்துக்கும், முத்தையாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஆனந்துக்கு திடீரென பணம் நெருக்கடி ஏற்பட்டது. அதற்காக தனது 50 சென்ட் நிலத்தை 4 லட்சத்துக்கு முத்தையாவிடம் ஆனந்த் கொடுத்து பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆனந்தின் குடும்பத்தாரிடம் முத்தையாவிற்கு பழக்கம் அதிகம் ஆனதால் ஆனந்தின் மனைவிக்கும், முத்தையாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் நாளடைவில் ஆனந்துக்கு தெரியவரவே இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். மேலும் முத்தையாவிடம் வாங்கிய பணத்தையும் வட்டியும் அசலுமாக திருப்பி கொடுத்த அவர் நிலத்தை திரும்ப தருமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தையா உனது நிலத்தை திருப்பி கேட்டால் உன் மனைவியுடன் இருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆனந்த் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்தையாவை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பல பகீர் தகவல்கள் வெளியாகின. அதாவது முத்தையாவின் லேப் டப்பை ஆய்வு செய்த போது அதில் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்த 50-க்கு மேற்பட்ட வீடியோக்கள் இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியில் உறைந்த போலீசார் முத்தையாவிடம் இருந்த 5 செல்போன்கள், ஒரு லேப்டாப் 5 பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்