வெளிய OPPO உள்ளே NOKIA உலா வரும் போலி மொபைல்ஸ்…!!
புது ஒப்போ (ஒப்போ) போன் உள்ளே பார்த்தா பழைய நோக்கியா (NOKIYA) பேட்டரி. லென்ஸ் இல்லாத கேமரா என திருப்பூரைக் கலக்கும் போலி மொபைல் போன்கள்.
திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான தொழிலாளர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் வந்து தங்கிப் பணியாற்றி வருகின்றனர். திருப்பூரில் வாரம் தோறும் சனிக்கிழமை அன்று சம்பளம் என்பதால் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதும்.
மேலும் தொழிலாளர்களிடம் பணப்புழக்கம் அதிக அளவில் இருக்கும் என்பதால் புதிய பொருட்களை வாங்கவும் அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள் இவர்களை குறி வைத்து போலியான மொபைல் ஃபோன்களை விற்பனை செய்யும் கும்பல் திருப்பூரில் களமிறங்கியுள்ளது.
அதன்படி கடைவீதிகளில் பொருட்கள் வாங்க செல்லும் புலம்பெயர் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் தமிழக தொழிலாளர்களிடம் அணுகும் வடமாநில இளைஞர்கள் தனக்கு அவசர பண தேவை எனவும் சொந்த ஊருக்கு செல்ல பணம் தேவை என்பதால் தன்னிடம் உள்ள புதிய செல்போனை விற்பனை செய்ய உள்ளதாக கூறி 20 ஆயிரம் ரூபாய் செல்போனை ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
குறைந்த விலைக்கு புதிய செல்ஃபோன் கிடைப்பதால் தொழிலாளர்களும் அதனை நம்பி வாங்கி செல்கின்றனர். ஆனால் இந்த போன்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை அவற்றின் உள்ளே பழைய பயன்படுத்தப்பட்ட பொருட்களை வைத்தும் தரமற்ற பொருட்களை வைத்து போனை தயார் செய்தது விசாரணையில் தெரியவந்தது…
மேலும் கேமரா உள்ள இடத்தில் வெறும் கண்ணாடி மட்டும் வைத்து லென்ஸ் இல்லாமலும் ஆயிரம் ரூபாய் அளவில் தயாரிக்கப்பட்ட மலிவான தரம் குறைந்த போலி செல்போன்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த செல்போன் ஒன்றை வாங்கிய வடமாநில தொழிலாளி கைதவறி செல்போனை உடைத்த நிலையில் அதனை சரி செய்ய மொபைல் போன் கடையை அணுகிய போது போலியான போன் என தெரிய வந்தது மேலும் இதுபோல தொடர்ந்து போலி போன் விற்பனை திருப்பூரில் நடைபெற்று வருவதும் தெரியவந்துள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..