மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி போலீஸ்..!!
டெல்லியில் உள்ள பிரசாந்த் விகார் பகுதியில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறாள். 20 வயது மாணவி காதலனுடன் கடந்த ஜூலை 7ம் தேதி அன்று காரில் தனிமையில் இருந்துள்ளனர். அதை பார்த்த தனி நபர் ஒருவர் செல்லில் வீடியோவாக செல்லில் பதிவிட்டுள்ளார்.
பின் காதலர்கள் இருவரும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர்.., அந்த தனி நபரும் அவர்களின் காரையே பின் தொடர்ந்து சென்றுள்ளார். அந்த காதலன், காதலியை தெரு பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளான். பின் அந்த தனிநபர், மாணவி தனியாக செல்வதை கவனித்துள்ளார். பின் மாணவியை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து.., தான் ஒரு காவல்துறையில் வேலை பார்ப்பதாகவும். காதலனுடன் தனிமையில் இருந்ததை மொபைலில் வீடியோவாக பதிவிட்டுளேன் என செல்போனை காண்பித்துள்ளார்.
என்னுடைய ஆசைக்கு இணங்க மறுத்தால் நான் அதை இணையதளத்தில் பதிவிட்டு விடுவேன் என கூறியிருக்கிறார். மாணவி மறுப்பு தெரிவிக்க அவரை தாக்கியுள்ளார்.., அதில் மாணவி அந்த இடத்திலேயே மயங்கி இருக்கிறாள். பின் அந்த மாணவியை அந்த இடத்திலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
நீண்ட நேரம் கழித்து மாணிவிக்கு இந்த பாதிப்புக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.., நடந்த சம்பவத்தை காதலினிடம் கூறியுள்ளார். பின் இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மாணவி கொடுத்த அடையாளங்கள் வைத்தும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் வைத்தும் அந்த தனிநபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்த பின்னரே அந்த நபர் போலீஸ் இல்லை என தெரியவந்துள்ளது.., அந்த போலி போலீஸிடம் விசாரணை மேற் கொண்டதில்.., அந்த மொபைலில் 100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளது.., பல பெண்களிடம் இதுபோல வீடியோக்கள் காட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அவரை பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அந்த நபரை சிறையில் அடைத்துள்ளனர்.