பிரபல நடிகர் டேனியல் பாலாஜி மரணம்…!!! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! கடைசி நொடியில் செய்த புனித செயல்…!!!
தமிழ் சினிமாவில் எத்தனை வில்லன் நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே.., அந்த வில்லத்தனதிற்கு ரசிகர் பட்டாலம் உருவாகும். அப்படி தமிழ் சினிமாவில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். தான் “டேனியல் பாலாஜி “.
எத்தனையோ படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும்.., வேட்டையாடு விளையாடு படத்தில் இவரின் நடிப்பை பற்றி சொல்ல.. வார்த்தையே இல்லை. நடிகர் கமலஹாசனிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
வெள்ளித்திரை, சின்னத்திரை என அனைத்திலும் நடித்து.., வேட்டையாடு விளையாடு, பிகில், பைரவா, காக்க காக்க, வடசென்னை மற்றும் பொல்லாதவன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்த இவர்.
கோவில் ஒன்றை கட்டி பலருக்கும் உதவிகள் செய்ய தொடங்கினார். தினமும் அன்னதானம், வயதானவர்களுக்கு அடைக்கலம் ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி என அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார்.
திருவான்மையூரில் வசித்து வந்த டேனியல் பாலாஜி நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கொட்டிவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் பொழுதே அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
அதன் பிறகு அவரது உடல் புரசைவாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு வெற்றிமாறன், கௌதம் மேனன் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டேனியல் பாலாஜியின் மரணம் திரையுலகினரை மட்டுமில்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிருடன் இருந்த பொழுதே ஏராளமானோருக்கு உதவிகளை செய்து வந்த நடிகர் டேனியல் பாலாஜி, இறந்த பின்னும் அவரது கண் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இறந்த பின்னும் கூட மற்றவருக்கு உதவிய இவரின் ஸே யால் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறந்த நடிகரும் சமூக ஆர்வலருமான “டேனியல் பாலாஜியின்: இறப்பிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் மதிமுகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..