‘விஜய் அரசியலுக்கு வந்தால் நான் ஆதரிப்பேன்’ முன்னணி நடிகரின் அதிரடி அறிவிப்பு!

விஜய் அரசியலுக்கு வந்தால் நான் ஆதரிப்பேன் என்று பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் விஜய்யிடம் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதன்பின் அவர் தன் ரசிகர்களை சந்தித்து செல்பியும் எடுத்து கொண்டார். இது உலகளவில் டிரெண்ட் ஆனது.

ஏற்கனவே தனது திரைப்பட விழா மற்றும் பொது வெளிகளில் அரசியல் பேசி வரும் நடிகர் விஜய். இதுகுறித்தும் மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

dulquer salmaanக்கான பட முடிவுகள்
துல்கர் சல்மான்

இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில் அவரிடம் நீங்கள் நடிகர் விஐய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர். கூறுகையில், “கொஞ்சம் கூட யோசிக்காமல் விஜய்க்கு ஆதரவளிப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

‘கொரோனா குறித்த விழிப்புணர்வு’ புதிய யுக்தியை கையிலெடுத்த மத்திய அரசு!

அன்பழகனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து !