அதிமுக முன்னாள் அமைச்சர் மீது பிரபல நடிகை வழக்கு..!! சிபிசிஐடி விசாரணை..!
அதிமுகவில் முன்னாள் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் எம்.மணிகண்டன். இவர் மீது துணை நடிகை சாந்தினி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது தன்னுடன் கடந்த 5 ஆண்டுகளாக மணிகண்டன் குடும்பம் நடத்தி வந்தார்.., அதனால் நான் கர்ப்பமானேன். ஆனால் அவர் என்னை கருக்கலைப்பு செய்ய வைத்தார்.
அதன் பின் சில நாட்கள் கழித்து என்னுடன் வீண் சண்டை போட்டுகொண்டு பிரிந்து சென்று விட்டார். இது தொடர்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நான் புகார் அளிதிருந்தேன்.
புகாரின் பெயரில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டன் கைது செய்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.., ஆனால் அவர் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளிவந்தார்.
வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த பின்.., இருவரும் சமரசம் செய்து கொண்டனர். மணிகண்டனும் சாந்தினியை நன்றாக பார்த்து கொள்வதாக கூறி கேஸை வாப்பஸ் பெற வைத்துள்ளார். ஆனால் வழக்கை வாபஸ் செய்த பின் சாந்தினியை சந்திக்காமல் தலைமறைவாகியுள்ளார் மணிகண்டன்.
அதன் பின் சாந்தினி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் மலேசியாவில் வேலை பார்த்து வந்த நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பம் ஆக்கினார்.
பின்னர் கருவை கலைக்குமாறு கூறியுள்ளார். அது தொடர்பாக சென்னை அடையாறு காவல் நிலையத்தில் கடந்த 2021-ல் வழக்கு பதிவு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டனின், அவரது உறவினர் ராமநாதனை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மணிகண்டன் வீட்டிற்கு சென்ற போது அவரது தாயார் அன்னக்கிளியும் கொலை வெறிதாக்குதல் நடத்தினார்கள்.
பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் என்னை மீட்டு மதுரை மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு ராமநாதபுரம் பி2 பஜார் காவல் நிலையத்தில் 2022 நவம்பர் 18ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் எவ்விதமான முன்னேற்றமும் இன்றி அந்த வழக்கு கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
எனவே இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட கோரி நடிகை சாந்தினி. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..