வாழ்க்கையை முடித்து கொண்ட பிரபல நடிகை..! குட்டிபத்மினி வெளியிட்ட பல அதிர்ச்சி தகவல்கள்..!
ஷரபஞ்சரா, கெஜ்ஜே பூஜே, பெல்லி மோடா, ஈரடு கனசு, கப்பு பிலுபு, பயலு தாரி, கந்ததா குடி, பங்கரடா ஹூவு போன்ற கன்னட திரைப்படத்தில் வெற்றி வாகை சூடியவர் கன்னட நடிகை கல்பனா.
இவர் தமிழில் மெட்ராஸ் டு பாண்டிச்சேரி மற்றும் சாது மிரண்டல் ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகில் கொடிக்கட்டி பறந்த நடிகை கல்பனா 1979ம் ஆண்டு அவரது வாழ்க்கையை அளவிற்கு அதிகமான தூக்க மாத்திரியை உட்கொண்டு முடித்து கொண்டார்.
இந்நிலையில் இவர் குறித்து தற்போது நடிகை குட்டி பத்மினி தனது யூடியூப் சேனலில் பேசியுள்ளர்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை குட்டி பத்மினி:
ஆம்பள அஞ்சுலம் என்றப் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் தனது மூன்றாவது வயதில் தமிழகத் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சிவாஜி கணேசன், ம. கோ. இராமச்சந்திரன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், ரசினிகாந்த், கமல்ஹாசன் உட்பட தமிழ் திரையுலகின் பல முக்கிய முன்னனி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குட்டிபத்மினி தனது யூடியூப் சேனலில் கூறியதாவது:
குட்டிபத்மினி தனது யூடியூப் சேனலில் பேசியதில் கன்னட நடிகை கல்பனா கன்னட சினிமாவிற்கு கிடைத்த வைரம், தமிழ் சினிமாவிற்கு சாவித்ரி எப்படியோ அப்படித்தான் அங்கு கல்பனா இருந்தார்.
இவர்களின் சாயல், நடை உடை எல்லாம் கொஞ்சம் சரோஜா தேவி போல இருக்கும். கன்னட சினிமாவில் டாப் நடிகையாக இருந்த கல்பனா முதல் முதலில் ராகவேந்திரா என்ற படத்தில் ஒரு சின்ன ரோலில் தான் நடித்திருந்தார்.
காதல் தோல்வியில் கல்பனா:
அதன்பின்னர் கல்பனா அவர்களுக்கு பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அப்போது இவர் நடித்த திரைப்படங்களில் அதிகமாக புட்டண்ணா கனகலுடன் சேர்ந்து நடித்ததால் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
ஆனால், புட்டண்ணா கனகனுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்ததால், அவரால் இந்த உறவை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. இதனால் மன வேதனையில் இருந்த கல்பனா, இனிமேல் நாம் சேர்ந்து படம் நடிக்க வேண்டாம் தனித்தனியாக நடிக்கலாம் என்று முடிவு எடுத்துவிட்டு பிரிந்துவிட்டனர்.
மன வேதனையில் கல்பனா:
புட்டண்ணா கனகனுவை பிரிந்தது அவரால் ஏற்றுகொள்ள முடியவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த கல்பனாவிற்கு அந்த சமயத்தில் அவர நடித்த திரைப்படங்களும் தேல்வியடைந்ததால் பட வாய்ப்புகளும் குறைந்து பண நெருக்கடிக்கு ஆளனார்.
இதனால் திடீரென ஒரு நாள் வைர மோதிரத்தை உடைத்து, 56 துக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால், அவரின் தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
அவர் மனதை எது காயப்படுத்தியது என்று தெரியவில்லை என்று குட்டி பத்மினி அந்த வீடியோவில் பேசி உள்ளார்.
-பவானி கார்த்திக்