‘நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ கைது’ ரசிகர்கள் அதிர்ச்சி!


பிரேலின் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ போலி பாஸ்போர்ட் பயன்படுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகில் மிகவும் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர்களில் முக்கியமானவர் பிரேசில் நாட்டை சேர்ந்த வீரர் ரொனால்டினோ. இவர் பிரேசிலில் 2002 ஆம் ஆண்டு உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர்.
2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும், 2005 ஆம் ஆண்டு பாலோன் டி’ஓர் விருதையும் வென்றவர்.

இந்நிலையில் ரொனால்டினோ போலி பாஸ்போர்டுடன் பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததற்காக பராகுவே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது அவரது ரசிர்களுக்கு பேரெதிர்ச்சியாக அமைந்துள்ளது.

What do you think?

பொறியியல் கல்வியில்,வேதியியல் கட்டாய பாடமாகத் தொடரவேண்டும்- வைகோ கோரிக்கை!

‘கொரோனா குறித்து கேள்வி எழுப்பிய வைகோ’ எழுத்து மூலம் பதிலளித்த மத்திய இணை அமைச்சர்!