கன்னட திரையுலகில் பிரபல இயக்குநரான கிரண் கோவி மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார்.
2023ம் ஆண்டு பிறந்து சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் திரை பிரபலங்கள் அடுத்தடுத்து மரணம் அடைந்து வருவது சினிமா ரசிகர்களை பெயர் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. தமிழ் திரையுலகில் சமீபத்தில் காமெடி நடிகர்கள் மயில்சாமி கோவை குணா ஆகியோரின் மறைவை தொடர்ந்து கன்னட திரையுலகில் பிரபல இயக்குனரான கிரன் கோவில் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி திரையுலகினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் கிரண் கோவி சாண்டல்வுட்டுக்கு பல படங்களை கொடுத்துள்ளார். சஞ்சாரி, பயனா, பாரு w/o தேவதாஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் கிரண் கோவி அலுவலகத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டா அவர் சிகிச்சை பலம் என்று உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.
50 வயதான இயக்குநர் கிரண் கோவியின் மறைவுக்கு சாண்டல்வுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கன்னட திரையுலகின் சிறந்த இயக்குனரான கிரண் கோவின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.