கரும்பு விலை ஏற்றம் கேட்டு விவசாயிகள் போராட்டம்..!!
கரும்பு டன் ஒன்றுக்கு 5000 விலை கேட்டு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவலம் தபால் நிலையம் எதிரே கையில் கரும்புடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் தபால் நிலையம் எதிரே தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஸ்ரீதர் தலைமையில் கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மத்திய அரசு ஆட்சியில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வு, யூரியா போட்டாஸ் டி.ஏ.பி விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கையில் கரும்புடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
பேட்டி: பெருமாள் (கரும்பு விவசாயிகள் சங்கம் மாநில பொருளாளர்)