தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டும், தமிழக உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு சென்ற பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்களும், பிரதிநிதிகளும் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

What do you think?

“கொரோனா வைரஸ்க்கு நித்யானந்தாவிடம் மருந்து இருக்கு”..?

மோதலில் ஈடுபட்ட இந்திய, வங்கதேச வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை