ட்ரோன் மூலம் வேளாண் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது பற்றி அதிகாரிகள் விளக்கம்..
காட்பாடி சேவூரில் ட்ரோன் மூலம் வேளாண் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது மற்றும் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்தும் அதிகாரிகள் மக்களுக்கு நேரடி செயல் விளக்கம் வழங்கினர்.
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் யாத்ரா மூலம் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சேவூர் ஊராட்சியில் ட்ரோன் மூலம் வேளாண் பயிர்களுக்கு மருந்து தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு நேரடியாக செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்,மத்திய அரசின் மக்கள் தொடர்பக மண்டல இயக்குனர் காமராஜ், விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில்திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் ஜமால் மொய்தீன் உள்பட பலர் பங்கேற்றனர்.
ட்ரோன் பயன்படுத்துவதின் மூலம் நேரம் மிச்சப்படுத்தப்படும்,ஆட்கள் பற்றாக்குறை தீர்க்கப்படும், மண் வளமும் பாதுகாக்கப்படும் என விவசாயிகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது .
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.