‘புல்வாமாவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிக்கு அடைக்கலம்’ தந்தை மற்றும் மகள் கைது!

புல்வாமாவில் மனிதவெடிகுண்டு தாக்குதல் நடத்திய 40 சிஆர்பிஎப் வீரர்களை கொன்ற தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தந்தை மற்றும் மகள் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் வென்ற வாகனம் மீது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சி அடையசெய்தது.

இந்த கொடூர தாக்குதலை நடத்தியவன் அடில் அகமது தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.இந்த நிலையில் இந்த தீவிரவாதிக்கு அடைக்கலம் கொடுத்ததோடு புல்வாமா பகுதியில் மர பொருட்கள் விற்பனை செய்யும் ஷாகீர் மாக்ரே(22) என்ற இளைஞரை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர்.

ஷாகீர்தான் ராணுவத்தினர் நடமாட்டம் குறித்த தகவலை மனித வெடிகுண்டு தீவிரவா அகமது தாருக்கு கூறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில் தீவிரவாதி அகமது தாருக்கு அடைக்கலம் கொடுத்ததாக மேலும் ஒரு தந்தை மற்றும் மகள் இருவரை இன்று தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றன.

What do you think?

‘இதுவரை யாரும் பார்த்திராத கெட்டப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ்’ வைரலாகும் புகைப்படங்கள் உள்ளே:-

விரட்டிய இருவரை மிதித்து கொன்ற யானை – கிருஷ்ணகிரியில் சோகம்