12 மனைவிகள், 102 பிள்ளைகள் மற்றும் 568 பேரப்பிள்ளைகளை கொண்ட உகாண்டா மாகாணத்தை சேர்ந்த மூஸா என்பவர் தற்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளர். இதனை அந்த நாட்டின் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஆப்ரிக்கா கண்டத்தில் உகாண்டா மாகாணத்தில் மூஸா என்பவர் வசித்து வருகிறார், தற்போது 67 வயதாகும் அவருக்கு ஒரு காலத்தில் வசதி மிக்கவராகவும் ஊர் தலைவர்கவும் மற்றும் தொழிலதிபராகவும் இருந்துள்ளார். அதனால் தனது சொத்துக்களை விரிவுபடுத்தவும் அதனை பாதுகாக்கவும் இதுவரை 12 திருமணங்கள் செய்துள்ளதாக கூறியுள்ளார். அந்த பேட்டியில் அவர் பேசுகையில், தன்னுடைய 16 வது வயதில் முதல் திருமணத்தை செய்து கொண்டு பிறகு தந்து குடும்பத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் பல மருமணங்களை செய்ததாகவும் தனது சொத்துக்களை விரிவுபடுத்த நினைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், தனது மனம் சொல்லுவதை மட்டும் செய்ததாகவும் எந்த ஒரு முடிவையும் அவசர அவசரமாக எடுத்ததில்லை என்று கூறிய அவர்,தன் குடும்பத்தில் எல்லோரையும் நான் சமமாகவே நடத்தியதாகவும். யாரையும் துன்புறுத்தியத்தில்லை என்றும் கூறினார் மேலும் தனது வீட்டில் 12 படுக்கையறைகள் தனக்கு 12 மனைவிகள், 102 பிள்ளைகள் மற்றும் 568 பேரப்பிள்ளைகள் இருப்பதாக கூறினார். அதனை தொடர்ந்து அவருக்கு பல பேர பிள்ளைகளின் பெயர்கள் கூட நியாபகம் இல்லை என்று கூறிய அவர் இதற்கு மேல் ஒரு குழந்தையை கவனித்துக்கொள்ள முடியாது என்ற சூழலுக்கு தள்ளப்பட்டதால் இனிமேல் குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்ததாக கூறியுள்ளார்.
தற்போது அவரது குடும்பத்தில் அதிகமான உறவுகள் இருப்பதால் அனைவருக்கும் தன்னால் பிடிக்க வைக்க முடியவில்லை என்றும் ஆகையால் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர் இனி வரும் சந்ததிகளுக்கு நான் ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். 4 மனைவிகளுக்கு மேல் கல்யாணம் செய்யாதீர்கள். ஏனெனில் இங்கு எதுவும் நீங்கள் நினைப்பதுபோல சூழல் மகிழ்ச்சியாக இருக்காது என்று தனது அனுபத்தை அறிவுரையாக கூறினார்.