கல்லீரல் கொழுப்பு பிரச்சனையா..? அப்போ இதை படிக்க மறக்காதீங்க..!!
இன்றைய நிறைய பேர் கொழுப்பு கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு இருக்கிறார்கள். இந்த கொழுப்பு கல்லீரலை கல்லீரல் ஸ்டீடோசிஸ் என்றும் அழைப்பர்.
இந்த பிரச்சனையின் போது கல்லீரல் செல்களுக்குள் அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்கியிருக்கும். இந்த கொழுப்பு கல்லீரல் நோயானது மது அருந்துபவர்களுக்கும், உடல் பருமனைக் கொண்டவர்களுக்கும் தான் பெரும்பாலும் ஏற்படுகின்றன.
இருந்தாலும், மது அருந்தாதவர்களுக்கும் இந்த கொழுப்பு கல்லீரல் நோய் உருவாகக்கூடும். அதுவும் இப்படிப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடியது ஆல்கஹால் அல்லாதகொழுப்பு கல்லீரல் நோயாகும்.
இப்படியான கல்லீரல் நோய் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளால் ஏற்படக்கூடும். கொழுப்பு கல்லீரல் நோய் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம்.
இந்த கொழுப்பு கல்லீரல் நோய்க்கு சிகிச்சை அளிக்காமல் இருந்தால், அது கல்லீரல் செயல்பாட்டை முழுமையாக நிறுத்தி, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். அதனால் உங்களுக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனை இருந்தால், அதை இயற்கையாகவே குணப்படுத்த ஒருசில ஜூஸ்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இப்போது கொழுப்பு கல்லீரலை குணப்படுத்த உதவும் அந்த ஜூஸ்கள் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க..
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையைக் கொண்டவர்கள் காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸை குடித்து அந்நாளைத் தொடங்கினால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள், கல்லீரலில் உள்ள வீக்கத்தை குடிக்கவும், அதன் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும்.
எலுமிச்சை மற்றும் இஞ்சி ஜூஸ் :
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையை சரிசெய்ய உதவும் மற்றொரு சக்திவாய்ந்த பானம் தான் எலுமிச்சை மற்றும் இஞ்சி ஜூஸ். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி கல்லீரலை சேதமடையாமல் பாதுகாக்கும். அதேப் போல் இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வீக்கத்தைக் குறைக்கும்.
இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு எலுமிச்சை சாற்றினை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, அத்துடன் இஞ்சி சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் இதில் குர்குமினும் உள்ளது. இது கல்லீரலை சேதமடையாமல் பாதுகாக்கும் மற்றும் கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். அதற்கு ஒரு டம்ளர் சுடுநீரில் சிறிது மஞ்சள் தூள் கலந்து குடிக்க வேண்டும்.
கேரட் ஜூஸில் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. மேலும் இதில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் ஏ போன்றவையும் உள்ளன.
கேரட் ஜூஸை தினமும் குடித்து வந்தால், கண்களுக்கு மட்டும் நல்லதல்ல, கல்லீரலுக்கும் நல்லது. குறிப்பாக இது கல்லீரலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.
அருகம்புல் ஜூஸ் உடல் எடையைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, அதில் உள்ள பல்வேறு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கின்றன. ஆய்வுகளில் கூட, அருகம்புல்லில் கல்லீரலைப் பாதுகாக்கும் பண்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எனவே கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கொழுப்பு கல்லீரலில் இருந்து விடுபடவும், அருகம்புல் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள்.
மேற்கண்ட குறிப்புகள் அனைத்தும் மருத்துவர்களிடம் கேட்டு குறிப்பிட்டாலும் உங்களின் உடல் வலிமை பொறுத்து இந்த குறிப்புகளை பின் பற்றுங்கள்.. மற்றவைகளுக்கு மதிமுகம் பொறுப்பள்ள
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..