கொரோனாவுக்கு ஜப்பானிடம் மருந்து உள்ளது – சீனா தகவல்

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட Favipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில், சீன அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள சீனா, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Fabipiravir என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளது.

FUJIFILM நிறுவனத்தின் துணை நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இம்மருந்தால் வுகானில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரானோவால் நுரையிரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் Favipiravir மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What do you think?

கொரோனா – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் டிப்ஸ்!

அமராவதி குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது – வைகோ வலியுறுத்தல்