தமிழ்நாடு

காதலர் தினத்தை முன்னிட்டு கொய்மலர்கள் ஏற்றுமதி

காதலர் தினத்தை முன்னிட்டு கொடைக்கானலிலிருந்து ஆயிரக்கணக்கான கொய்மலர்கள் மற்றும் ரோஜா  ஏற்றுமதிசெய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் காதலர் தினம் நாளை கொண்டாடப்படவுள்ளது. அதில் முக்கிய  பங்கு வகிப்பது ரோஜாமலர்கள் தான். கொய் மலர்களும், ரோஜா பூக்களும்,  கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் அதிகளவு பயிரிடப்படுகின்றன. அந்த வகையில்  பிரகாசபுரம்  குண்டு பட்டி,கவுஞ்சி போன்ற பகுதிகளில்  பல ஏக்கர் பரப்பளவில் தனியார் நிறுவனங்கள் நர்சரி  அமைத்து  உயர்ரக பூ  வகைகளான கார்னேசன், ஜிப் சோப்ர, சார்ட்டிஸ், அஷ்டோமேரிய, பேட் ஆப் பாரடைஸ் போன்ற பூக்களை  பயிரிட்டு பராமரிப்பு செய்துவருகின்றன.

இந்த  உயர்ரக பூ வகைகள் மலர் கொத்துகள் கொடுப்பதற்கு பயன்படுகின்றன.  இந்த உயர் ரக பூக்கள் காதலர் தினம் மற்றும் பண்டிகை நாட்களிலும் சுமார் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுவதால்  தனியார் கார்டன்  நிறுவனங்கள் மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  3 நாட்களில் மட்டும் தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கும்,கர்நாடக,ஆந்திர,கேரளா,மும்பை மற்றும் வடமாநிலங்களுக்கும்  லட்சக்கணக்கான  பூக்கள் கொடைக்கானலிருந்து  ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் அதிகரித்த தங்கம் விலை..!

Digital Team

சிறார் ஆபாச படம்; புதிய லிஸ்ட் ரெடி!

Digital Team

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு …!என்ஐஏ அதிகாரிகள் சோதனை

superadmin

திருச்சியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

Digital Team

ஏப்ரல் 14 ஆம் தேதி கட்சி பெயரை அறிவிக்கும் ரஜினி..!

Digital Team

டிஎன்பிஎஸ்சி முறைகேடு: தீவிரம் காட்டும் சிபிசிஐடி!

superadmin
You cannot copy content of this page
Madhimugam