பெண் மருத்துவர் மரணம்.. விசாரணைக்கு தயார் ஆன சி.பி.ஐ..!
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் என்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. வயது, உடை என்று எந்தவொரு பாகுபாடும் இல்லாமல், அனைத்து தரப்பட்ட பெண்களுக்கும், இந்த மாதிரியான அநீதிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரிலும், தற்போது சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், கடந்த 8-ஆம் தேதி அன்று, பணியில் இருந்துள்ளார்.
அடுத்த நாள், அவரை பார்க்க சென்றபோது, சடலமாக கிடந்துள்ளார். இந்த சம்பவம், அந்த மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த பயிற்சி மருத்துவரின் குடும்பத்தினர், தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார் என்று குற்றஞ்சாட்டியிருந்தனர்.
மேலும், இந்த வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைத்து உத்தரவிட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, அப்பகுதிக்கு, சி.பி.ஐ அதிகாரிகள் வருகை தந்துள்ளனர்.
இந்த வழக்கை விசாரணை நடத்துவதற்கு, 3 குழு பிரிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு குழு, சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள ஊழியர்கள், மருத்துவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்