ரயிலில் தனியாக செல்லும் பெண் பயணிகளே உஷார்… காபி வாங்கி கொடுப்பதாக கூறி ஆட்டையை போடும் இளம் பெண்..!
சென்னை ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு காபியில் மயக்கம் மருந்து கொடுத்து கைவரிசை காட்டிய இளம் பெண்னை போலீசார் கைது செய்தனர்.
ரயில் நிலையங்களில் தனியாக செல்லும் பெண்கள் அசதியாக இருக்கும்போது தான் காபி வாங்க செல்வதாகவும் தங்களுக்கும் வாங்கி வருவதாகவும் கூறி பயணிக்கு வாங்கி வரும் காப்பியில் மயக்க மருந்து கொடுத்து கைவரிசை காட்டிய திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த 23 வயதான பூமிகா என்ற இளம் பெண்ணை எழும்பூர் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஜூன் 12-ம் தேதி தஞ்சை செல்லும் தன்வந்திரி எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்ற போது இளம் பெண்ணுக்கு காபியில் மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்து லேப்டாப்புகள் மற்றும் தங்கச் செயினை பறித்து சென்றார்.
அதேபோல கடந்த 17-ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்தில் மற்றொரு பெண்ணிடம் காபியில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவரிடம் இருந்து தங்கச்சாலி செயின் பணம் ஆகியவற்றை பறித்து சென்றார்.
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் எழும்பூர் ரயில்வே போலீசார் திருவாரூர் பகுதியைச் சேர்ந்த பூமிகா என்ற இளம் பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்