கர்ப்பகால முதுகுவலியை சரி செய்ய சில டிப்ஸ்..!!
கர்ப்பகாலம் என்பது மிக முக்கியமான ஒன்று கர்ப்பகாலத்தில் பெண்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனால் அந்த சமையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு பலவித உடல் மாற்றங்களும் ஏற்படும்.. முக்கியமாக இந்த சமையத்தில் முதுகுவலி அனுபவிப்பார்கள்.
சில சமையம் மன உளைச்சலும் ஏற்படும். இதற்கான சில தீர்வுகள் குறித்து இந்த குறிப்பில் பார்க்கலாம்.
முதுகுவலி வருவதற்கான முக்கிய காரணம் குறைந்த உடல் இயக்கம் தான். தசைப்பிடிப்புகள் ஸ்டிப் ஆக இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. அதற்கு
* நீங்கள் தினமும் கால்களை நீட்டிய படி அமர்வது,
* குறுகிய தூரம் நடப்பது,
* தினமும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது,
* தினமும் யோகா செய்வது, போன்ற செயல்களை செய்தால் முதுகுவலி நீங்கி விடும்.
மசாஜ் :
கர்ப்பகாலத்தில் ஏற்படும் முதுகு வலியால் முதுகில் ஆரமித்து தோள்பட்டை, மற்றும் இடுப்பு என அனைத்து தசை பகுதியிலும் வலி பரவி விடும்.. தினமும் ஒரு 20 நிமிடம் உங்கள் முதுகு பகுதியில் ஒரு மென்மையான மசாஜ் செய்யலாம்.
தூக்கம் :
முதுகுவலி கடுமையாக இருந்தால்.. கர்ப்பிணி பெண்களுக்கு இரவில் தூக்கம் கெட்டு விடும். ஒரு சிலர் முதுகு தரையில் படும்படி உறங்குவார்கள் அது இன்னும் வலியை அதிகரிக்க கூடும்.
நேராக படுப்பதை விட, எதாவது ஒரு பக்கமாக திரும்பி, கால் இடுக்கில் தலையணை வைத்து, முழங்கால்களை லேசாக மடக்க வேண்டும்.
பெல்ட் மற்றும் காலணி :
கர்ப்பிணி பெண்களுக்கு கடைசி மூன்று மாதத்தில் முதுகுவலி தீவிரமாக இருக்கும். அந்த சமையத்தில் மகப்பேறு மருத்துவர்களின் பரிந்துறையில் இருக்கும் காலணி மற்றும் பெல்ட் பயன் படுத்தலாம்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..