சுருட்டை முடி வைத்து இருபவர்கள் கவனத்திற்கு..!!
கூந்தல் பராமரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்று.., இதற்கு முன்னும் கூந்தல் பராமரிப்பு மற்றும் கூந்தல் உதிர்வு பற்றி பார்த்தோம். ஆனால் இந்த குறிப்பு சுருட்டை முடி உள்ளவர்களுக்கு மட்டுமே.
தினமும் ஹேர் வாஷ் செய்வது கடினம். ஆனால் வாரத்திற்கு இருமுறையாவது ஹேர் வாஷ் செய்ய வேண்டும். காரணம் முடிக்கு தேவதையான நீர் கிடைக்கும் பொழுது.., அது கூந்தல் உதிர்வை குறைக்கும்.
சுருட்டை முடி உள்ளவர்களுக்கு முடி வறட்சியாக இருக்கும். எனவே கட்டாயம் இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது ஹேர் வாஷ் செய்ய வேண்டும். சுருட்டை முடி வைத்தவர்கள் தான்.., முடியை அதிகம் பராமரிக்க வேண்டும்.
கண்டிஷனர் : ஒரு சிலர் ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்து முடித்தவுடன், கண்டிஷனர் பயன் படுத்துவார்கள், அதில் தவறில்லை கண்டிஷனரை முடியில் மட்டும் பயன் படுத்தாமல், தலை முழுவதும் பயன் படுத்த வேண்டும் முக்கியமாக தலையின் “ஸ்கேல்ப்” பகுதியில்.
தலையின் ஸ்கேல்ப் பகுதி என்றும் வறண்டே காணப்படும். தலைக்கு குளித்தால் அதற்கு சரியான ஊட்டப்பதம் கிடைப்பதில்லை. கண்டிஷனர் பயன் படுத்தி, தலையை அலசும் பொழுது.., அதற்கு சரியான ஈரப்பதம் கிடைக்கும்.
ஹேர் ஜெல் : ஒரு சிலர் தலைக்கு ஹேர் ஜெல் பயன் படுத்துவார்கள். இதனால் முடி கொட்டும் அபாயம் ஏற்படுமா என்று கேட்டால்.., அது தவறு சுருட்டை முடி இருப்பவர்கள் ஹேர் ஜெல் பயன் படுத்தலாம். இது தலைக்கு என்றும் ஈரப்பதத்தை கொடுத்து கொண்டே இருக்கும்.
இரண்டு நாளைக்கு ஒருமுறையாவது.., தலையில் ஈரபதத்தை நிலைக்க செய்து இருக்க வேண்டும். இல்லை என்றால் முடி கொட்டுவது அதிகமாகிவிடும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ. லோகேஸ்வரி.